காசேதான் கடவுளடா



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     ர் மக்களின் நலனுக்காக வங்கியில் கொள்ளையடிக்கிறார் நாயகன். கொள்ளை யடித்து பணம் பறிபோன நிலையில் மீண்டும் அந்த பணத்தை அடைய நாயகன் எடுக்கும் முயற்சி தான் கதை.

அறிமுக நாயகன் ஷரன் சீனியர் நடிகர் போல் சர்வ சாதாரணமாக நடித்துள்ளார். நடிப்பில் பாஸாகியுள்ள அவருக்கு எதிர்காலம் உண்டு.

காம்னா ஜெத்மலானி பாடலுக்கு மட்டும் வந்து போகிறார். கருணாஸ், பாண்டிய ராஜன், சத்யன், மனோபாலா, டெல்லிகணேஷ், ஜீவா, சிங்கமுத்து, பாண்டு, திவ்யா கூட்டணி நான் ஸ்டாப் நகைச்சுவை விருந்து படைத்துள்ளார்கள். கருணாஸ் இசையில் ‘உன்னை ஒரு முறை...’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

லாஜிக் பார்க்காமல் காமெடிக்கு மட்டும் முக்கியத் துவம் கொடுத்து அந்த முயற்சி யில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் திருமலை.