லெக்பீஸ் இல்லாத பிரியாணி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘அடிக்கிறவன் மட்டுமில்லை, அடிவாங்குறவனும் வீரன்தான்!’ என்கிற ‘கதாநாயகன்’ படத்தின் கோட்பாடு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வாழ்க்கையின் மறைபொருள் தத்துவங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது ‘சரோஜாதேவி பதில்கள்’
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

‘கதாநாயகன்’ முருகானந்தம், தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

‘சுயநலத்தில் பிறக்கிறது பொதுநலம்’ என்கிற தலைப்போடு ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ தொடர் முடிந்தது சிறப்பு. கலைஞரின் வசனத்தில்  ‘பராசக்தி’ படத்தில் வரும் ‘ஆகாரத்துக்காக அழுக்கை உண்கிறதே மீன்’
என்கிற வசனம் நினைவுக்கு வந்தது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

மயங்கவைக்கும் கவர்ச்சிப் படங்களுக்கு கிறங்க வைக்கும் கலக்கல் வாசகங்கள்தான் ‘வண்ணத்திரை’யின் சிறப்பே. இந்த வாரம் படங்களுக்கு  கமெண்ட்ஸ் இல்லாதது லெக்பீஸ் இல்லா பிரியாணியை சுவைத்தது போல இருந்தது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

ஏராளமான நடிக, நடிகையரை தமிழ்த் திரையுலகுக்கு உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் இமயம், நடிப்பிலும் தன்னுடைய முத்திரையை ‘குரங்கு  பொம்மை’ வாயிலாக பதித்திருப்பது பெருமைக்குரிய நிகழ்வாகும்.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

‘கதை எழுத கத்துக்கலாம்’ தொடர் நுணுக்கமான உதாரணங்களோடும், பல வெற்றிப்படங்களின் திரைக்கதை எழுதப்பட்ட சூழலையும்  அடிக்கோடிட்டு மிகச்சுவையான முறையில் பரிமாறப்பட்ட விருந்தாக வாசகர்களுக்கு அமைந்தது. இன்னும் ஓராண்டு தொடர்ந்திருக்கலாம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.