வூடு கட்டி அடிக்கப் போகிறார் திரிஷா!



திரிஷா இனியும் சாக்லேட் பேபி இல்லை. மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக தொடைதட்டி ஆக்‌ஷனில் களமிறங்குகிறார். கொடைக்கானலின்  கொண்டை ஊசி வளைவு சாலைகளில் தன்னந்தனியாக டெரர் ஸ்பீடில் ஜீப் டிரைவிங், காரைக்குடியில் பட்டையைக் கிளப்பும் புழுதியில் ஹார்ஸ்  டிரைவிங் என்று ரிஸ்கெடுத்து அதிரடி ஆக்‌ஷன் காட்டுகிறார். ‘கர்ஜனை’க்காகத்தான் இப்படி வீறுகொண்டு எழுந்திருக்கிறார்.

“திரிஷாவுக்கு ‘நாயகி’ படத்துலேயே ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் இருந்தது. அதுலே பிரமாதப்படுத்தி இருந்ததாலேதான் இப்படி ஒரு கதையை தைரியமா  அவங்ககிட்டே சொன்னேன். கதையைக் கேட்டதுமே சம்மதிச்சி உடனே கமிட் ஆயிட்டாங்க. சும்மா நடிச்சு கொடுப்போம்னு ஏனோதானோன்னு  பண்ணாமல் ரியலாகவே கடினமா உழைச்சுக் கொடுத்திருக்காங்க.

ரோப் ஷாட்ல டூப் போடாமல் ஸ்டண்ட் பண்ணி யூனிட்டையே மிரளவச்சிட்டாங்க’’ என்று ஃபுல் அண்ட் ஃபுல் திரிஷா புராணம் பாடுகிறார்  ‘கர்ஜனை’யின் அறிமுக இயக்குநர் சுந்தர் பாலு. விளம்பரத் துறையிலிருந்து சினிமாவில் தடம் பதிப்பவர்களில் இவர்தான் லேட்டஸ்ட்.
“இது பாலிவுட் ‘NH10’ ரீமேக்னு சொல்றாங்களே...?”

“இப்படி டாக் வந்ததுக்கு நானும் ஒரு காரணம்.  சில வருஷங்களுக்கு முன் ‘என்.எச்.10’ படத்தை ரீமேக் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு. அது  மாதிரி ஆணவக் கொலை தொடர்பான கதைகள் நம்ம ஊர்லேயே நிறைய வந்திருச்சு. உதாரணத்துக்கு, ‘அரண்மனை-2’ல திரிஷா அவங்க  அப்பாவையே பலிவாங்குவாங்களே? அதனால ‘என்.எச்.’ ஐடியாவை கைவிட்டுட்டோம்.

ஹீரோக்களுக்கு கதை ரெடி பண்ணினால் அவங்க கால்ஷீட் கிடைக்க டைம் எடுக்கும். அதனாலதான் நான் ஹீரோயின் சப்ஜெக்டில் இறங்கினேன்.  கதை ரெடியானதுமே திரிஷாவோட கால்ஷீட் எந்த வில்லங்கமும் இல்லாமல் மொத்தமா கிடைச்சிடுச்சு. ஸோ, இது அதோட பட ரீமேக்கா  இருக்குமோனு டாக் வந்திடுச்சு. ஆனா, உண்மை அதில்லை. இது எதோட ரீமேக்கும் இல்லை. ஃப்ரெஷ் சப்ஜெக்ட்.”
“ரஜினி படத்தோட டைட்டிலில் திரிஷா?”

“ரஜினிக்கு ஆக்‌ஷன் இமேஜ் கொடுத்ததில் முக்கியமான படம் ‘கர்ஜனை’. இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்ததாலே விரும்பி  வெச்சிருக்கோம்.”“திரிஷாவின் ‘கர்ஜனை’க்கு யார் காரணம்?”“நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னை நம்மகிட்ட வரும்போது அதனால் ஏற்படும்  கோபம் தான் இந்த ‘கர்ஜனை’. வெஸ்டர்ன் டான்ஸரான திரிஷா, ஒரு ஈவென்ட்டுக்காக கொடைக்கானல் போறாங்க. அங்கே அவங்களுக்கு நேரும்  பிரச்னை. அதிலிருந்து அவங்க எப்படி தப்பிக்கிறாங்க? என்பதே படத்தின் ஒன்லைன் கதை.

திரிஷா தவிர வம்சி கிருஷ்ணா, அமித், வடிவுக்கரசி, சுவாமிநாதன், தவசி, மதுமிதா, மதுரைமுத்து, ஆர்யன், ஸ்ரீரஞ்சனின்னு கதைக்குத் தேவையான  ஸ்டார்கள் இருக்காங்க. ‘சௌகார்பேட்டை’, ‘பொட்டு’ படங்களின் இணைத் தயாரிப்பாளர் ஜோன்ஸ் இந்தப் படத்தின் மூலம் சோலோ  தயாரிப்பாளராக புரோமோஷன் ஆகியிருக்கார். எங்களுக்கு டெக்னிக்கலாகவும் ஸ்டிராங் டீம் அமைஞ்சிருக்கு.

தெலுங்கில் பல படங்கள் ஒர்க் பண்ணின சிட்டிபாபு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ அம்ரீஷ் இசையமைச்சிருக்கார்.  இப்போ விலங்குகளைப் பயன்படுத்துவதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கறதால.. படத்துல ஒரு காமிக் ஃபைட் முயற்சி பண்ணியிருக்கோம்.  கிராபிக்ஸ்ல கரடி இடம்பெறும் அந்த ஃபைட் சீனில் காமெடியும், கரடி சேஸிங்கும் பிரமாதமா பேசப்படும்.”‘‘நிறைய விளம்பரங்களை இயக்கியிருக்கீங்க. மூவி டைரக்‌ஷன் அனுபவம் எப்படி?’’

“நான் பொறந்து வளர்ந்தது சென்னையிலதான். எங்க அப்பா பாலன், அந்தக் காலத்து படங்களுக்கு ஆர்ட் டைரக்டரா இருந்தவர். என்னோட அஞ்சு  வயசில இருந்து ஷூட்டிங் பார்க்கறேன். 27 விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கேன். இந்தத் துறை எனக்கு புதுசா தெரியல. தயாரிப்பாளர்கிட்ட நான்  சொன்ன டேட்ல படத்தை முடிச்சு கொடுத்துட்டேன்.

விளம்பர மேக்கிங்ல டைமிங்கும், ஷாட்ஸ் பியூட்டியும் ரொம்ப முக்கியம். ஒவ்வொரு நொடியும் அங்கே காசு. அங்கே கத்துக்கிட்ட அனுபவம்தான்  இங்கே படம் பண்ணும்போது ரொம்பவே உதவியா இருந்தது. இப்பல்லாம் தியேட்டர்ல ஸாங்ஸ் வந்தாலே எழுந்து வெளியே போக  ஆரம்பிச்சிடுறாங்களே.

ஒரு பாடலுக்கே நாலரை நிமிஷம் டைம் எடுத்து, அதுக்காக லட்ச லட்சமா செலவு பண்றது எல்லாம் வீணாகுறதைப் பார்க்கறோம்.  இதையெல்லாம்  மைன்ட்ல வச்சு, படத்துல அம்ரீஷ்கிட்ட சொல்ல.. நறுக்னு மூணு பாடல்கள் கொடுத்தார். ஒவ்வொரு பாடலும் ரெண்டரை நிமிஷம்தான். ரெண்டு  மான்டேஜ் ஸாங்ஸ். ஒண்ணு, திரிஷாவின் ஓபனிங் ஸாங்.”

“திரிஷாவை ரொம்பவும் புகழுறீங்களே?”

“திரிஷாவுக்கு இது 58வது படம். தீபிகா படுகோனே, சமந்தானு நிறைய டாப் ஸ்டார்களோட விளம்பரப் படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். ஆனா,  திரிஷா அவ்வளவு டெடிகேட்டட் பொண்ணு.  படத்துல நீங்க ஹில்ஸ் ஏரியாவில் ஜீப் ட்ரைவ் பண்ண வேண்டியிருக்கும். உங்களுக்கு ஜீப்  ஓட்டத்தெரியுமானு கதை சொல்லும் போதே அவங்ககிட்ட கேட்டேன்.

சிரிச்சுக்கிட்டே தெரியும்னு சொன்னாங்க. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்காங்கனு நினைச்சேன். ஆனா, நிஜமாகவே டிரைவிங்ல கலக்கினாங்க.  படத்துல ரோப் சீன்ஸ், ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் நிறைய இருக்குதுனு தெரிஞ்சதும், சுப்ரீம் சுந்தர் மாஸ்டர்கிட்ட ஃபைட்ஸ் நிறைய கத்துக்கிட்டு  ட்ரெயினிங் எடுத்துட்டு நடிச்சாங்க. ஷாட் கன்ட்டினியூட்டில ரொம்ப பர்ஃபெக்ட்டா கன்டினியூட்டி கவனிக்கிறாங்க. இண்டஸ்ட்ரியில இத்தனை  வருஷம் சக்சஸா இருக்கறதுக்கு அதுதான் காரணம்!’’

- மை.பாரதிராஜா