ஆறாம் வேற்றுமை



மலைகிராமமும், மர்ம மரணங்களும்!

அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராமங்கள், மலைவாழ் மக்களின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ‘ஆறாம் வேற்றுமை’.கூனிக்காடு என்றொரு மலை கிராமம். மக்கள் நடமாட்டம் இல்லாத மர்ம தேசம்.

அங்கு செல்பவர்கள் பிணமாகிறார்கள். அடுத்தடுத்து மர்மக்  கொலைகள் நடக்கின்றன. மர்மத்தை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் வருகிறார். அப்படி வரும் அவர் மலைக்காட்டின் மர்மத்தை  கண்டுபிடித்தாரா இல்லையா, அந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் அஜய் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாயகி கோபிகா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.  யோகிபாபுவை இன்னும் கூட நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார் கணேஷ் ராகவேந்திரா. அறிவழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு  பெரும் பலமாக அமைந்திருக்கிறது. நட்சத்திர பலம், பிரம் மாண்டம் இல்லாமலேயே ரசனையான படம் கொடுத்து முத்திரை பதித்துள்ளார் இயக்குநர்  ஹரிகிருஷ்ணா.