ஒரு கனவு போல...



நண்பன் மனைவியிடம் தவறாக நடக்க துணிந்தவன்!

நாயகன் ராமகிருஷ்ணனும்  சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். பெற்றோரை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே தங்குகிறார்.

இந்நிலையில், ராமகிருஷ்ணனுக்கும், அமலா ரோஸ்க்கும் திருமணம் நடக்கிறது. ஒரு மழைச்சூழலில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற சவுந்தரராஜா மனம் வருந்தி, வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதன்பின் நடக்கும் ஆசாபாசங்களே கதை.

படிக்காத லாரி டிரைவராகவும், நட்புக்கு மரியாதை கொடுப்பவராகவும் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தியிருக்கிறார் ராமகிருஷ்ணன். சவுந்தரராஜா படித்த இளைஞராகவும், வாழ்க்கை கொடுத்த ராமகிருஷ்ணன் மீது மரியாதை கொண்டவராகவும் நடித்திருக்கிறார். செய்த தவறுக்காக வருத்தப்படும் காட்சிகளில் தெளிவான நடிப்பு. நாயகி அமலா ரோஸ் நல்லதொரு  குடும்பப்பெண் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருக்கிறார்.

ராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அழகப்பனின் ஒளிப்பதிவு உறுத்தல் இல்லாமல் உள்ளது. நண்பர்களுக்குள் இருக்கும் ஆழமான நட்பையும், கணவன், மனைவிக்குள் இருக்கும் பாசத்தையும் கலந்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் சங்கர்.