விரகதாப ஆட்டம்!‘பாதுஷாஹோ’ படத்தைத் தொடர்ந்து சஞ்சய் தத் நடிக்கும் ‘பூமி’ படத்திலும் விரகதாப ஆட்டம் போட்டிருக்கிறார் சன்னி லியோன். மராட்டியில் உருவாகும் ‘பாய்ஸ்’ படத்தில் கோவாவைச் சேர்ந்த மீனவப்பெண் காஸ்டியூமில் கிக் ஆட்டம் ஆடியிருக்கிறாராம்.சிறுவன் ஒருவனின் நிர்வாணப் படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார் மாஜி ஹீரோ ரிஷி கபூர். அப்பாவின் இந்தச் செயலால் வெட்கத்தால் தலை குனிவதாக குமுறியுள்ளார் அவரது மகன் ஹீரோ ரன்பீர் கபூர்.

காதலன் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலைனுடன் படு நெருக்கமாக நடித்த ‘தி ஜென்டில்மேன்’ தோல்வி அடைந்ததால் தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளார் அலியா பட்.‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தின் ஷூட்டிங் ருமேனியாவில் நடக்கிறது. மாஜி காதலன் சல்மான் கான் தங்கியுள்ள ஓட்டலிலேயே தங்குவதற்கு மறுத்துவிட்டாராம் கேத்ரினா கைப். இதையடுத்து அவரை வேறொரு ஓட்டலில் தங்க வைத்திருக்கிறது பட டீம்.

- ஜியா