கிஸ்ஸுக்கு நோ சொன்ன கோஹ்லி!‘முபாரக்கான்’ படம் தோல்வி அடைந்ததால், இலியானாவை போட்டு எடுத்த மற்றொரு படமும் அவுட் என இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இலியானாவை கிண்டல் அடித்துள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. இருவருக்கும் இடையிலான சண்டை தெருவுக்கு வந்துவிட்டது என மற்ற ஹீரோயின்கள் குஷியாகி இருக்கிறார்களாம்.

‘ஹாரி மெட் சேஜல்’ படத்தில் ஷாருக்கானுடன் லிப் டு லிப் கிஸ் காட்சி இருந்ததாம். ஆனால் அதில் நடிக்க மறுத்திருக்கிறார் அனுஷ்கா சர்மா. இதற்கு விராட் கோஹ்லியின் நிபந்தனைதான் காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் மரணமடைந்த இளம் ஹீரோ இந்தர்குமார் இறுதிச் சடங்கில் மற்ற ஹீரோக்கள் கலந்துகொள்ளாதது வருத்தம் அளித்ததாக பிரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார்.‘ஜுட்வா-2’வில் தனது கேரக்டரை குறைத்துவிட்டு டாப்ஸிக்கு தயாரிப்பாளர் முக்கியத்துவம் தருவதாக மற்றொரு ஹீரோயின் ஜாக்குலைன் புகார் கூறியிருக்கிறார்.

- ஜியா