சதுரஅடி 3500பேஸ்மெண்டு வீக்கு!

கட்டுமானப்பணி நடக்கும் ஒரு பில்டிங்கில் கொலை நடக்கிறது. அந்த பில்டிங்கில் அமானுஷ்ய சக்திகள் நடமாடுவதாக சொல்லப்படுகிறது. கொலை எப்படி நடந்தது? செய்தது யார்? கொலையாளியை நாயகன் கண்டுபிடித்தாரா? என்பது திரைக்கதையாக விரிகிறது. கொலைவழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நிகில் மோகன் நடித்திருக்கிறார். தன்னை நிலைநிறுத்தவேண்டும்   என்ற வேகத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

காதலன் ஆவியாகிவிட்டபிறகு, அவன் சம்மதத்துடன் இன்னொருவனைத் திருமணம் செய்துகொள்ளும்  லட்சியப்பெண் கதாபாத்திரத்தில் இனியா வந்துபோகிறார். ரகுமான், பிரதாப் போத்தன் ஆகியோருக்கு சரியான வாய்ப்பு இல்லை, கிடைத்ததில் திறமையைக் காட்டுகிறார்கள்.

கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சுவாதி ஆகியோரும் அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார்கள். பெசன்ட் நகர் அன்புவை காமெடி பீஸாக காட்டியிருப்பது நல்ல காமெடி.

ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவில் உறுத்தல் இல்லை. கணேஷ் ராகவேந்திரா அக்கறையோடு இசையமைத்திருக்கிறார்..திரைக்கதை அஸ்திவாரத்தில் உறுதி கூட்டியிருந்தால், ஸ்ட்ராங்கான படத்தைக் கொடுத்த  பெயரை  இயக்குநர் ஜெய்சன் பெற்றிருக்கலாம்.