பைம்பொழில் மீரான்

பிலிமாயணம்  2

எங்கள் வீட்டின் முன் பெரிய முற்றம் இருந்தது. அதில் ஓலைத்தடுப்பு வைத்து ஒரு மினி தியேட்டர் கட்டினேன். உள்ளே ஒரு பகுதியில் அப்பாவின் வேஷ்டியைக் கொண்டு ஸ்கிரீன் கட்டினேன். இன்னொரு பகுதியில் தியேட்டருக்கு பின்புறம் சின்னதாக கேபின் கட்டி அதிலிருந்து புரொஜக்டர் வழியாக ஸ்லைட் ஷோ நடத்தினேன்.

ஆனால்-பத்து பிலிம்களை வைத்து எத்தனை நாள் படம் காட்டுவது. ஒரு முறை செங்கோட்டை சென்று ஜனதா தியேட்டர் ஆபரேட்டரிடம் அஞ்சு ரூபாய் கொடுத்து நிறைய பிலிம் வாங்கினேன். கை நிறைய அள்ளிக் கொடுத்தார் மனுஷன். சிகரெட் அட்டைகளை சேகரித்து, அதனை கத்தரித்து நானே சிலைட் தயாரித்தேன்.

இருபது முதல் முப்பது சிலைட்களை கொண்ட ஒரு ஷோ நடத்தினேன். அந்த சிலைட்களில் இருக்கும் காட்சிகளுக்கேற்ப ஒரு கதை தயார் செய்து அதை கேபினில் இருந்து சொல்வேன். உள்ளே இருக்கும் பத்து பதினைந்து வாண்டுகளும் கைதட்டி ரசிப்பார்கள். ஒரு வாண்டுக்கு அஞ்சு காசு என்பது அன்றைய கட்டணம். இப்படி பல நாட்கள் அந்த தியேட்டர் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அதிகாலையில் தலைமறைவாக இருந்த தந்தையைத் தேடி வந்த போலீஸ் படை அந்த தியேட்டருக்குள் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் தியேட்டர் தரைமட்டம் ஆனது. தீவிரவாத பிரச்சாரத்துக்கு சிலைட் தயாரித்திருக்கக் கூடும் என்று கருதி அந்த புரொஜக்டரையும் சிலைடுகளையும் அள்ளிச் சென்றது போலீஸ். எனது மொத்த கனவும் கலைந்தது.

என் தந்தைக்கு சினிமா ஏனோ பிடிக்கவில்லை. தன் ஆயுளில் அவர் தியேட்டருக்குச் சென்று சினிமா பார்த்தது மிகமிக குறைவு. வயதான காலத்திலும் டிவியில் அவர் அதிக படம் பார்க்கவில்லை. செய்திகளைத்தான் பார்த்தார். சினிமா சமுதாயத்தை கெடுக்கும் விஷம் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆனால் நான் சினிமா வெறியனாக இருந்தேன்.

சில நாள் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது அப்பா வீட்டில் எனக்காக நள்ளிரவிலும் காத்திருப்பார். சினிமா பார்க்க போனதற்காக எனக்கும், அதை அனுமதித்ததற்காக அம்மாவுக்கும் செம அடி விழும். சில நேரம் முற்றத்தில் இருக்கும் தென்னை மரத்தில் என்னைக் கட்டிப்போட்டுவிட்டு பக்கத்திலேயே கயிற்றுக்கட்டிலைப்போட்டு படுத்துக் கொள்வார் அப்பா.

ஓர் உறவினர் வீட்டுத் திருமணத்தில் அப்பாவும் நண்பர்களும் அமர்ந்து சீட்டு விளையாடினார்கள். அன்றைக்கு அப்பா நிறைய பணம் ஜெயித்தார். அந்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் நிறைய தீனி வாங்கிக் கொடுத்தார். “உனக்கு என்னடா வேணும்?” என்று கேட்டார். நான் சினிமாவுக்கு போகணும் என்றேன். பத்து ரூபாய் தாளை கையில் கொடுத்து போய் நல்ல படமா பார்த்துட்டு வா என்று அனுப்பி வைத்தார்.

என் தந்தை என்னை சந்தோஷமாக சினிமாவுக்கு அனுப்பி வைத்த முதல் நாளும் கடைசி நாளும் அதுதான். நான் செங்கோட்டைக்கு படம் பார்க்க சென்றேன்.ஜனதா தியேட்டரில் ‘தங்கப் பதக்கம்’ படம் ஓடிக் கொண்டிருந்தது. பத்மநாபா தியேட்டரில் ‘திருடாதே’ படம் ஓடிக் கொண்டிருந்தது. மாலை 6 மணிக்காட்சி ‘தங்கப் பதக்கம் படத்தையும், இரவு 10 மணிக்காட்சியாக ‘திருடாதே’ படத்தையும் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குப்போனேன். அப்பாவின் அனுமதியுடன் சென்றிருப்பதால் கவலையில்லாமல்தான் சென்றேன். எதிர்பார்த்தது போலவே நள்ளிரவிலும் அப்பா எனக்காகக் காத்திருந்தார்.

நான் தைரியமாக அவர் அருகில் சென்றேன். “படம் நல்லா இருந்திச்சுத்தா!” என்றேன்.
“என்ன படம் பார்த்த?” “தங்கப்பதக்கத்தை திருடாதே” என்றேன்.
“அப்படியொரு படமா? நான் கேள்விப்பட்டதே இல்லையே?”
“இல்லத்தா...... ஜனதா தியேட்டர்ல ஓடுது.”

எங்கிருந்துதான் அவருக்கு அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை.“ஏண்டா என்னை என்ன முட்டாப்பயன்னு நினைச்சியா? போனா போகுதுன்னு சினிமா பார்க்க அனுப்பினா ஒண்ணுக்கு ரெண்டு படம் பார்த்துட்டு சாமத்துல வீடு திரும்பினதோட அல்லாம அதை ஒரே படம்னு பொய்வேற சொல்வ...” என்றபடியே அருகில் கிடந்த புளிய விளாறால் வாங்கு வாங்கென்று வாங்கினார்.

இனிமே இந்த ஊர்லேயே இருக்கக்கூடாது. ஊரவிட்டே ஓடி நிறைய சினிமா தியேட்டர் இருக்கிற ஊர்ல வாழணும். முடிஞ்சா சினிமா தியேட்டர்ல வேலை பார்க்கணும் என முடிவு செய்தேன். அன்றிலிருந்து சில மாதங்கள் கழித்து அம்மா என்னை செங்கோட்டை ஆதி திராவிடர் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்தாள். ஊரைவிட்டு போனால் போதும் என்று நானும் மகிழ்ச்சியோடு செங்கோட்டை விடுதியில் சேர்ந்தேன். அந்த விடுதிக்கு நேர் எதிரில் இருந்தது செங்கோட்டை ஜனதா தியேட்டர்...

(பிலிம் ஓட்டுவோம்)

எங்கள் வீட்டின் முன் பெரிய முற்றம் இருந்தது. அதில் ஓலைத்தடுப்பு வைத்து ஒரு மினி தியேட்டர் கட்டினேன். உள்ளே ஒரு பகுதியில் அப்பாவின் வேஷ்டியைக் கொண்டு ஸ்கிரீன் கட்டினேன். இன்னொரு பகுதியில் தியேட்டருக்கு பின்புறம் சின்னதாக கேபின் கட்டி அதிலிருந்து புரொஜக்டர் வழியாக ஸ்லைட் ஷோ நடத்தினேன்.

ஆனால்-பத்து பிலிம்களை வைத்து எத்தனை நாள் படம் காட்டுவது. ஒரு முறை செங்கோட்டை சென்று ஜனதா தியேட்டர் ஆபரேட்டரிடம் அஞ்சு ரூபாய் கொடுத்து நிறைய பிலிம் வாங்கினேன். கை நிறைய அள்ளிக் கொடுத்தார் மனுஷன். சிகரெட் அட்டைகளை சேகரித்து, அதனை கத்தரித்து நானே சிலைட் தயாரித்தேன்.

இருபது முதல் முப்பது சிலைட்களை கொண்ட ஒரு ஷோ நடத்தினேன். அந்த சிலைட்களில் இருக்கும் காட்சிகளுக்கேற்ப ஒரு கதை தயார் செய்து அதை கேபினில் இருந்து சொல்வேன். உள்ளே இருக்கும் பத்து பதினைந்து வாண்டுகளும் கைதட்டி ரசிப்பார்கள். ஒரு வாண்டுக்கு அஞ்சு காசு என்பது அன்றைய கட்டணம். இப்படி பல நாட்கள் அந்த தியேட்டர் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அதிகாலையில் தலைமறைவாக இருந்த தந்தையைத் தேடி வந்த போலீஸ் படை அந்த தியேட்டருக்குள் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் தியேட்டர் தரைமட்டம் ஆனது. தீவிரவாத பிரச்சாரத்துக்கு சிலைட் தயாரித்திருக்கக் கூடும் என்று கருதி அந்த புரொஜக்டரையும் சிலைடுகளையும் அள்ளிச் சென்றது போலீஸ். எனது மொத்த கனவும் கலைந்தது.

என் தந்தைக்கு சினிமா ஏனோ பிடிக்கவில்லை. தன் ஆயுளில் அவர் தியேட்டருக்குச் சென்று சினிமா பார்த்தது மிகமிக குறைவு. வயதான காலத்திலும் டிவியில் அவர் அதிக படம் பார்க்கவில்லை. செய்திகளைத்தான் பார்த்தார். சினிமா சமுதாயத்தை கெடுக்கும் விஷம் என்பது அவரது கருத்தாக இருந்தது. ஆனால் நான் சினிமா வெறியனாக இருந்தேன்.

சில நாள் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது அப்பா வீட்டில் எனக்காக நள்ளிரவிலும் காத்திருப்பார். சினிமா பார்க்க போனதற்காக எனக்கும், அதை அனுமதித்ததற்காக அம்மாவுக்கும் செம அடி விழும். சில நேரம் முற்றத்தில் இருக்கும் தென்னை மரத்தில் என்னைக் கட்டிப்போட்டுவிட்டு பக்கத்திலேயே கயிற்றுக்கட்டிலைப்போட்டு படுத்துக் கொள்வார் அப்பா.

ஓர் உறவினர் வீட்டுத் திருமணத்தில் அப்பாவும் நண்பர்களும் அமர்ந்து சீட்டு விளையாடினார்கள். அன்றைக்கு அப்பா நிறைய பணம் ஜெயித்தார். அந்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் நிறைய தீனி வாங்கிக் கொடுத்தார். “உனக்கு என்னடா வேணும்?” என்று கேட்டார். நான் சினிமாவுக்கு போகணும் என்றேன். பத்து ரூபாய் தாளை கையில் கொடுத்து போய் நல்ல படமா பார்த்துட்டு வா என்று அனுப்பி வைத்தார்.

என் தந்தை என்னை சந்தோஷமாக சினிமாவுக்கு அனுப்பி வைத்த முதல் நாளும் கடைசி நாளும் அதுதான். நான் செங்கோட்டைக்கு படம் பார்க்க சென்றேன்.ஜனதா தியேட்டரில் ‘தங்கப் பதக்கம்’ படம் ஓடிக் கொண்டிருந்தது. பத்மநாபா தியேட்டரில் ‘திருடாதே’ படம் ஓடிக் கொண்டிருந்தது.

மாலை 6 மணிக்காட்சி ‘தங்கப் பதக்கம் படத்தையும், இரவு 10 மணிக்காட்சியாக ‘திருடாதே’ படத்தையும் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குப்போனேன். அப்பாவின் அனுமதியுடன் சென்றிருப்பதால் கவலையில்லாமல்தான் சென்றேன். எதிர்பார்த்தது போலவே நள்ளிரவிலும் அப்பா எனக்காகக் காத்திருந்தார்.

நான் தைரியமாக அவர் அருகில் சென்றேன். “படம் நல்லா இருந்திச்சுத்தா!” என்றேன்.
“என்ன படம் பார்த்த?” “தங்கப்பதக்கத்தை திருடாதே” என்றேன்.

“அப்படியொரு படமா? நான் கேள்விப்பட்டதே இல்லையே?”
“இல்லத்தா...... ஜனதா தியேட்டர்ல ஓடுது.”எங்கிருந்துதான் அவருக்கு அவ்வளவு கோபம் வந்ததென்று தெரியவில்லை.

“ஏண்டா என்னை என்ன முட்டாப்பயன்னு நினைச்சியா? போனா போகுதுன்னு சினிமா பார்க்க அனுப்பினா ஒண்ணுக்கு ரெண்டு படம் பார்த்துட்டு சாமத்துல வீடு திரும்பினதோட அல்லாம அதை ஒரே படம்னு பொய்வேற சொல்வ...” என்றபடியே அருகில் கிடந்த புளிய விளாறால் வாங்கு வாங்கென்று வாங்கினார்.