மருத்துவ முத்தம்சரோஜாதேவி பதில்கள்

* பெண்ணின் கடைக்கண் பார்வை என்ன சொல்ல வருகிறது?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
மருத்துவ முத்தம் கேட்கிறதோ என்னவோ!
* உல்லாசம் - சல்லாபம்; என்ன வித்தியாசம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சல்லாபம் என்பதே உல்லாசம்தான். அதை தவிர்த்த வேறு விஷயங்களிலும் உல்லாசத்தை உணரலாம்.
* பெண் நினைத்தாலும் முடியாதது எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பெற முடியும். கொடுக்க முடியாது. அது!
* காதலியின் இடுப்பைக் கிள்ளலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
கிள்ளுவதற்கு வேறு இடமா இல்லை?
* கிளி மாதிரி மனைவி அமைந்தாலும், நரி மாதிரி சின்னவீட்டை சிலர் தேடிச்செல்வது ஏன்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கிளி கொத்திக்கொண்டே இருக்கிறது என்பதால் இருக்குமோ?