பாகுபலியின் அழகில் மயங்கிய அலியா!



ஷாருக்கான் தயாரித்து நடிக்க உள்ள படத்தில் வாய்ப்பு கேட்டு, அவரது மனைவி கவுரிக்கு தூது அனுப்பியுள்ளாராம் ஜாக்குலின் பெர்னாண்டஸ். ஆனால், கவுரிக்கோ ஷாருக்கானை நெருங்க முயற்சிக்காத ஹீரோயினாக தேர்வு செய்யத்தான் விருப்பமாம்.‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சல்மான் கானுடன் மீண்டும் நெருக்கம் ஆகிவிட்டாராம் கேத்ரினா கைப். இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாகவும் கிசு கிசு கிளம்பியுள்ளது.

‘பாகுபலி-2’ பார்த்தது முதல் பிரபாஸின் தீவிர ரசிகை ஆகிவிட்டாராம் அலியா பட். இந்தியில் பிரபாஸ் நடித்து அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கேட்டால் உடனே கால்ஷீட் தருவேன் என்கிறார்.‘மாம் இந்தி’ படத்துக்கு ஸ்ரீதேவி கேட்டதால்தான் இசையமைத்ததாகக் கூறும் ஏ.ஆர்.ரஹ்மான், தான் இளம் வயதில் இருந்து அவரது தீவிர ரசிகன் என்கிறார்.

புரூஸ்லீயின் வாழ்க்கையை ஹாலிவுட்டில் படமாக்க முயன்று வருகிறார் பாலிவுட் டைரக்டர் சேகர் கபூர். இதை அறிந்து கொதித்த ராம் கோபால் வர்மா, புரூஸ்லீயின் பக்தன் நான். என்னை விட அவரது வாழ்க்கையை யாராலும் சிறப்பாகப் படமாக்க முடியாது என புலம்பி வருகிறார்.
‘பாகுபலி’ மெகா ஹிட்டால் புராண, சரித்திரக் கதைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மன்னன் சிவாஜி கதையை ஜெனிலியாவின் கணவரான ஹீரோ ரிதேஷ் தேஷ்முக் தயாரிக்க உள்ளார். இதில் நடிக்க ஹிரித்திக் ரோஷனிடம் பேச்சு நடக்கிறதாம்.

தான் நடித்துள்ள ‘பேவாட்ச்’ ஹாலிவுட் படம் ரிலீசாக உள்ள நிலையில் தனது படு ஆபாசமான நீச்சல் உடை படங்களை லீக் செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்தப் படங்கள் வெளியான சூட்டோடு அவருக்கு ‘எ கிட் லைக் ஜேக்’ என்ற மற்றொரு ஹாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த படத்தில் கவர்ச்சியான இளம் அம்மாவாக அவர் நடிக்கிறாராம்.

மும்பையில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் ஹீரோயின் நிதி அகர்வால். அடிக்கடி நள்ளிரவில் பாலிவுட் விஐபிக்கள் அவரது வீட்டுக்கு வந்து சென்றதால் வீட்டை காலி செய்ய வைத்துவிட்டாராம் ஹவுஸ் ஓனர். இப்போது ஓட்டலில்தான் நிதி தங்கியிருக்கிறாராம்.

- ஜியா