டைரக்டரின் கஸ்டடியில் டாப்ஸி!



அபிஷேக் பச்சன் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். அந்தப் படங்களில் அவர் மனைவி ஐஸ்வர்யாராய் இல்லை என்பதால் பாலிவுட் பரபரப்பு அடைந்திருக்கிறது.

“கிரிக்கெட் வீரர்களை காதலிப்பது ஆபத்தானது” என்று ஸ்டேட்மென்ட் விட்டு அனுஷ்கா சர்மாவை வம்புச்சண்டைக்கு இழுத்திருக்கிறார் பிபாஷா பாசு. நடிகர் கரண்சிங் குரோவரை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக அனுஷ்காவின் காதலர் விராட் கோஹ்லிக்கு ரூட்டு விட்டு லவ் ஃபெய்லியர் ஆனவர் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி, டைரக்டர் நீரஜ் பாண்டேயின் கஸ்டடியில் இருக்கிறார் என்று பாலிவுட்டில் கிசுகிசு. நீரஜ் ஓக்கே சொன்னால்தான் படங்களையே ஒப்புக் கொள்கிறாராம். சமீபத்தில் ஒரு பாட்டுக்கு ஆட கிடைத்த வாய்ப்பை நீரஜ் சொல்லியதால்தான் நிராகரித்தாராம்.அந்தக்கால கனவுக்கன்னி ‘ரங்கீலா’ ஊர்மிளாவின் படு கவர்ச்சியான படத்தை ட்விட்டரில் போட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார் வில்லங்க இயக்குநர் ராம்கோபால் வர்மா. அப்செட் ஆன ஊர்மிளா, ‘எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி என்பதை மறக்க வேண்டாம்’ என்று சூடாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேஷன் விழாவுக்கு சென்னை வந்த சோனாக்‌ஷி சின்ஹா, ஏ.ஆர்.முருகதாஸை பயங்கரமாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ‘அகிரா’ மூலம் தன்னுடைய இமேஜை ஒட்டுமொத்தமாக அவர் மாற்றிவிட்டார் என்று சொன்னவர், அவர் கேட்டால் தமிழில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

- ஜியா