காதல் கண்கட்டுதே



விரிசல் காணும் காதல்!

ஹீரோ கேஜியும் ஹீரோயின் அதுல்யாவும் கல்லூரி நண்பர்கள். சினிமா வழக்கப்படி ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதுல்யா, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கிறார். சக பத்திரிகை நண்பர் ஒருவரிடம் அவர் யதார்த்தமாகப் பழக, அது கேஜிக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. காதல் விரிசல் காண்கிறது. காதலர்கள் இணைந்தார்களா என்பதே கிளைமேக்ஸ்.

நடுத்தர குடும்பத்துப் பையன் வேடத்துக்கு கேஜி கச்சிதமாகப் பொருந்துகிறார். துடிப்பும், தவிப்புமாக அவரது சேட்டைகள் ரசிக்க முடிகிறது. அதுல்யாவுக்கு அழகே துணை. கோலிக்குண்டு கண்களை அவர் உருட்டும்போது படம் பார்க்கும் நம் இதயம் நாமறியாமல் நழுவுகிறது.பவனின் இசையில் பாடல்கள் படத்துக்கு பலம்.

‘காதலே உனக்கு என்ன பாவம் செய்தேனோ’, ‘என்னை கொஞ்சமாய் கொன்றாயே’ ஆகிய பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம். இயக்குநரே  ஒளிப்பதிவு என்பதால் அணுஅணுவாக ரசிக்கவைத்து விருந்து படைத்திருக்கிறார்.காதலர்களிடையே நடக்கும் சின்னச் சின்ன சண்டைகளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லியிருக்கிறார்  இயக்குநர் சிவராஜ்.

விமர்சனங்கள் தொகுப்பு : சுரேஷ்ராஜா