வளைவுகள் உசுப்பேற்றும்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘டைட்டில்ஸ் டாக்’, ‘ஹீரோயினிஸம்’, ‘கதை எழுத கத்துக்கலாம்’ என்று ‘வண்ணத்திரை’ தொடர்கள் அபாரமாக அமைந்திருக்கின்றன. கொஞ்சநாட்களாகவே இதழ் பளிச்சென்று இருக்கிறது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

குளிர் வாட்டும் பருவத்தில்.. அனலூட்டும் அங்கத்தின் அழகசைவுகளும், வளைவுகளும் உசுப்பேற்றும்.. உறக்கத்தில் பசியாறச் செய்யுது ‘வண்ணத்திரை’.
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

‘யாருக்கு ஜோடி யாரோ’ வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தக் கோணத்தில் கூட ஆராய்ந்து எழுத முடியுமா என்று ஆச்சரியப்படுத்தியது.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

‘காதல் பிறக்கும் கணத்திலே காமத்துக்கும் சிறகு முளைக்கிறது’ என்கிற சரோஜாவின் பதில் உலக சிந்தனைகளுக்கு எல்லாம் சவால் விடும் கணக்காக இலக்கியத்தரமாக அமைந்தது.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

நடுப்பக்க எமி ஜாக்சனின் தாராளத்தை பார்க்கும்போது தாராளமாத்தான் பட்ஜெட் போட்டிருக்காங்க என்றே எனக்கும் தோன்றியது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சினிமாவில் நடிப்பு மட்டுமே வேலையில்லை என்கிற விஜயலட்சுமியின் கருத்து உண்மையானது.
- கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

‘முத்து விளைவது ஆழ்கடலிலே’ன்னு போட்டு சமந்தாவின் தொப்புளை ஃபோகஸ் செய்திருக்கும் உம்மைப்  பிடித்து  நாகசைதன்யாவிடம்
ஒப்படைத்தால் என்ன?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.