எப்பவும் இதே நினைப்புதானா?



சரோஜா தேவி பதில்கள்

* வாழ்க்கை கசக்கிறது. இனிப்பாக்குவது எப்படி?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
காமம்தான் சுகர் ஃபேக்டரி. காதல்தான் அதற்கு நுழைவாயில். வழி சொல்லிட்டேன். நீங்கதான் உள்ளே நுழைஞ்சாகணும்.

* அடிக்கடி போடும் வேஷம் எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
என்னவோ ‘அது’ கொஞ்சமும் பிடிக்காத மாதிரி, ‘எப்பவும் இதே நினைப்புதானா?’ன்னு சலிச்சிக்கிற மாதிரி போடுற வேஷம்.

* சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?
- ப.முரளி, சேலம்.
பசிச்சா ஏதோ ஒண்ணை சாப்பிட்டுட்டு போங்க. எதுக்கு இந்தத் தேவையில்லாத ஆராய்ச்சி?

* அதென்ன கடவுள் தேசத்து நடிகைகள் அத்தனை பேரும் கல்விதான் முக்கியம் என்கிறார்களே?
- மு.ரா.பாலாஜி, கோலார்.
ஒரு நொடி பக்குன்னு ஆயிடிச்சி. நல்லவேளை, ‘ல’வுக்கு மேலே புள்ளி வெச்சீங்க.

* தொப்புளில் பம்பரம் விட்டா சுழலுமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
1992லேயே இந்தச் சாதனையை கேப்டன் செய்துவிட்டார். கிராஃபிக்ஸில் ராக்கெட்டே விடும் காலத்தில் இந்தக் கேள்வி தேவையா?