சிறகு முறிந்த சிம்ரன்!



திரைசரம்!

மும்பை மாடலாக இருந்த சிம்ரனை முதன்முதலாக தமிழில் அறிமுகப்படுத்த இருந்தவர் பாரதிராஜா. பி.ஜி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில் அவர் இயக்கிய ‘சிறகுகள் முறிவதில்லை’ படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நெப்போலியன் நடித்தார். முக்கால்வாசி படப்பிடிப்பு நடந்திருந்த வேளையில் ஏனோ தெரியவில்லை, இந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டு விட்டது. ஒருவேளை வெளியாகி இருந்தால் சிம்ரனுக்கும், ‘ர’ வரிசையில் பாரதிராஜா பெயர் வைத்து அறிமுகப்படுத்தி இருப்பார்.

பறக்க ஆரம்பிப்பதற்குள்ளாகவே தன்னுடைய சிறகு முறிந்துவிட்டதே என்று வருத்தத்தில் இருந்த சிம்ரனுக்கு உடனடியாகவே அடுத்தடுத்த வாய்ப்புகள் ஒன்றுக்கு மூன்றாக கிடைத்ததுதான் ஆச்சரியம். பிரபுதேவா நடித்த ‘விஐபி’ படத்தில் ஒப்பந்தமானார். அதே நேரம் இவருக்கு மாடலிங்கில் அறிமுகமாகி இருந்த நண்பர் அப்பாஸ் மூலமாக ‘பூச்சூடவா’ படத்திலும் நடித்தார்.

ஆனால், ‘விஐபி’, ‘பூச்சூடவா’ படங்கள் வெளிவருவதற்கு முன்பாகவே விஜய்க்கு ஜோடியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி சிவாஜி நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் அறிமுகமாகி விட்டார். மூன்று படங்களிலுமே டைட்டிலில் ‘அறிமுகம் : சிம்ரன்’ என்றுதான் போட்டார்கள்.