கரெண்டு கட்டு..சன்னியோடு ஜல்லிக்கட்டு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

எங்கள் ‘தல’ அஜித்துக்கு இரண்டு படங்களில், ‘சீயான்’ விக்ரம் குரல் கொடுத்திருக்கிறார் என்கிற அபூர்வ தகவலை கொடுத்ததற்கு நன்றி. ‘தல’ குறித்த திரைப்பயணத்தை தொகுத்துத் தந்த கட்டுரைதான் எங்களுக்கு ‘தல’ பொங்கல்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஷேப்புக்கு வருகிறார் லட்சுமிமேனன்!’ என்று எங்கள் ஆவலை தூண்டியிருக்கிறீர்கள். அவர் ஷேப்புக்கு வந்தபின்னால் எடுக்கப்பட்ட படங்களை எக்ஸ்க்ளூஸிவ்வாக எங்களுக்கு வழங்கிடுவீர்கள்தானே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் காமெடி நடிப்பில் முன்னணிக்கு வந்திருக்கும் யோகிபாபுவின் பேட்டி சிறப்பு. மைனஸ் என்று மற்றவர்கள் கருதிய அவருடைய தோற்றத்தையே பிளஸ் பாயிண்டாக மாற்றி ஜெயித்த அவரது டெக்னிக் தூள்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

முப்பத்தி ஒன்றாம் பக்க புளோஅப்பை நன்கு உற்றுப் பார்த்துவிட்டேன். பீரோ, பூட்டிதான் கிடக்கு. சாவி எங்கே இருக்குன்னு மரியாதையா சொல்லிடுங்க.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘காமத்தின் எல்லை’ எதுவென்று மிகச்சரியாக வரையறுத்துச் சொல்லியிருக்கிறார் சரோஜாதேவி.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

வளர்ந்து வரும் நடிகை என்றாலும் தன்னுடைய சுயகவுரவத்தை இழக்காமல் போராடும் ‘கயல்’ ஆனந்தி, புதுமுக நடிகைகளுக்கு ரோல்மாடல்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

நடுப்பக்கத்தில் கரெண்டு கட்டு. சன்னியோடு ஜல்லிக்கட்டு என்று ஜல்லிக்கட்டு நடக்காத சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழர்களை இப்படி உசுப்பிவிடுவது நியாயமா?
- குந்தவை, தஞ்சாவூர்.