நிலா காயுது! நேரம் நல்ல நேரம்!



சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா விழாவில் ‘டூபீஸ்’ போன்ற ஆடையில் டான்ஸ் ஆடினார் தமன்னா. இதனால் நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், ‘கலை நிகழ்ச்சி’ நடத்தலாம் வர்றீங்களா என்று தான் கூப்பிடுகிறார்களாம்.

செம கடுப்பில் இருக்கிறார் தம்மு.ஹாலிவுட் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்ததால் அமெரிக்க கலாச்சாரத்துக்கு முற்றிலுமாக மாறிவிட்டார் பிரியங்கா சோப்ரா. மும்பைக்கு திரும்பிய பிறகும் நைட் கிளப்புகளில் விடிய விடிய உற்சாக பானத்தில் ஊறி தன்னை ஊக்கப்படுத்திக் கொள்கிறாராம். காலையில் காஃபிக்கு பதிலாக ஒயின் அருந்துகிறார் என்று நெருக்கமானவர்கள் புலம்புகிறார்கள்.

மனைவி சொல்லியும் கேட்காத அக்‌ஷய்குமார், கூட நடித்த ஹூமா குரேஷி சொன்னதால் மது குடிப்பதை நிறுத்தி விட்டாராம். ஹூமாதான் இப்போது முன்னணி ஹீரோக்களின் கனவுக் கன்னி என்று ஹாட் காசிப்.‘வஜா தும் ஹோ’ தோல்வியென்றாலும், அதில் கிளுகிளுப்பாக நடித்ததால் பாலிவுட்டில் ஹிட்டாகி இருக்கிறார் சனாகான்.

அதேபோல கிளுகிளுப்பாக நடிக்க நம்ம ஊர் நிலா (மும்பையில் மீரா சோப்ரா) ரெடியாம். இதற்காக டூபீஸில் சூடான போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். இவர் பிரியங்கா சோப்ராவின் ஒண்ணுவிட்ட தங்கச்சி என்பது தெரியுமில்லே?

- ஜியா