பிரபுவால் நயன்தாராவுக்கு சங்கடம்!



திரைமலர் சரம்!

நயன்தாராவின் கையில் ‘பிரபு’ என்று ஆங்கிலத்தில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூ, இப்போது அவருக்கு மட்டுமின்றி அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கும் சங்கடத்தை கொடுக்கிறதாம். விரைவில் இந்த டாட்டூவை அகற்றும் ஐடியாவில் இருக்கிறாராம்.

காமெடி நடிகர் வையாபுரி, ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘மழையில் நனைந்த தங்கம்’ என்கிற அந்தப் படம் இதுவரை திரைக்கு வரவில்லை.

‘சித்திரம் பேசுதடி’ நரேன், ஆரம்பத்தில் நடிகராக ஆசைப்படவில்லை. திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்ற பட்டதாரி இவர். ஓரிரு படங்களில் ஒளிப்பதிவு உதவியாளராக பணியாற்றிய பின்பு, நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம். அப்படியே நடிகராகிவிட்டார்.

ஸ்ருதிக்கு லேசர் சிகிச்சை!

விவேக் ஹீரோவாக நடித்து சில படங்கள் வெளியாகி விட்டாலும், அவர் முதன்முறையாக ஹீரோ ஆன ‘சொல்லி அடிப்பேன்’ இன்றுவரை வெளியாகவில்லை.

கவர்ச்சி நடிகை சோனா, சமீபத்தில் ரகசியமாக பூஜை போட்டு சொந்தப் படத்தின் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார். இதில் திரிஷாதான் ஹீரோயின்.

அர்ஜுன், இராம.நாராயணனின் இயக்கத்தில் ‘நன்றி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாவதற்கு முன்பாகவே கன்னடத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

ஸ்ருதிஹாசன், தம்பி ராமைய்யா, சமுத்திரக்கனி மூவரும் அதிநவீன லேசர் சிகிச்சை மூலமாக தங்கள் பார்வைக் கோளாறை சரி செய்திருக்கிறார்கள்.

துறுதுறு ஜனனி!

பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்னம், ‘கொஞ்சும் குமரி’ படம் மூலமாகத்தான் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். அதற்கு முன்பாக முக்தா சீனிவாசன் இயக்கிய ‘தாமரைக்குளம்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து ஓரிரு காட்சிகள் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு திடீரென்று இயக்குநராக உருவெடுத்த படம் ‘புதுப்பாடகன்’. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அவரே எழுதி இசையமைத்திருந்தார். விஜயகாந்த், அமலா நடித்திருந்த இந்தப் படத்துக்கு முதலில் ‘தெருப்பாடகன்’ என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள்.

ஜனனி அய்யர் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பெண் இயக்குநர் ஜே.எஸ்.நந்தினி இயக்கிய ‘திருதிரு துறுதுறு’ படத்தில் சிறுவேடத்தில் நடித்திருக்கிறாராம்.