தாத்தாவாகிறார் சிம்பு!



‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்தில் சிம்புவின் கெட்டப்புகளை பரம ரகசியமாக பொத்திப் பொத்தி பாதுகாக்கிறது யூனிட்.மதுரை மைக்கேல் என்று வழக்கமான சிம்புவாக லந்து கொடுக்கும் கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.

மற்றொரு பாத்திரம்தான் சிம்புவின் கேரியரில் மைல்கல்லாக அமையும் என்கிறார்கள். அஸ்வின் தாத்தா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கேரக்டருக்காக அறுபது வயது கிழவராக வித்தியாசமான கெட்டப்பில் வருகிறாராம் சிம்பு. இதற்காக உடல் எடையை வெகுவாக கூட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.தமன்னா, ஸ்ரேயா என்று இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தில் தாத்தாவுக்கு ஜோடியாக நடிக்கும் பாட்டி யார் என்பதுதான் நம்முடைய கவலை.

- யுகி