ஜனனி ஐயர் ரொம்ப சின்சியர்!



புது டைரக்டர் ஜில்லு

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என்கிற பலமான பிராண்டோடு களமிறங்கியிருக்கிறார் விஜய்பாஸ்கர். படத்தின் டைட்டிலே சும்மா அதிருது. ‘விதி மதி உல்டா’. ஒரு பாடல் காட்சிக்காக பாங்காக் போக டிக்கெட் போட்டுக் கொண்டிருந்தவரிடம் ஹலோ சொன்னோம்.
“பயோடேட்டா ப்ளீஸ்?”

“ஈரோட்டுக்காரன். ஸ்கூல் படிப்போடு திருப்தியாயிட்டு மெட்ராசுக்கு ரயிலேறிட்டேன். ஒரு எடிட்டிங் ஸ்டுடியோவில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ கிடைச்ச தொடர்புகள் மூலமா முருகதாஸ் சார் கிட்டே சேர்ந்தேன். ‘கஜினி’ (இந்தி), ‘ஏழாம் அறிவு’ன்னு சில படங்கள் அவர்கிட்டே வேலை பார்த்தேன். அஞ்சு வருஷ அனுபவம் கிடைச்சதும் தனியா வந்து முயற்சி பண்ணி, இப்போ இந்த படம் பண்ணிக்கிட்டிருக்கேன்.”
“தலைப்பு சும்மா கும்முன்னு இருக்கே?”

“இந்தப் படத்துக்கு ‘உல்டா’ன்னுதான் முதலில் தலைப்பு வெச்சேன். அது அரபிக் வார்த்தை. வரிவிலக்கு கிடைப்பதில் பிரச்சினை வரும்னு சொன்னப்புறம் தான் ‘விதி மதி உல்டா’ன்னு வெச்சேன்.”
“என்ன கதை?”

“இது பிளாக் காமெடி ஜானர். வழக்கமான கதைதான். சில விஷயங்கள் இப்படிதான் நடக்கும்னு நாம யூகிப்போம். ஆனா அது நடக்காமலேயே கூட போயிடும். சில விஷயங்கள் நடக்கவே நடக்காதுன்னு நெனைப்போம்.

அது நடந்துடும். நம்ம மனசுக்கும், வாழ்க்கை நடப்புக்குமான இந்த போட்டியைத்தான் இதுலே டீல் பண்ணியிருக்கேன். இதுக்கு மேலே கதையைச் சொன்னா, படம் பார்க்குறப்போ நல்லாருக்காது. ஏதோ தத்துவார்த்தமா சொல்லுற மாதிரி தெரியும். ஆனா, ஸ்க்ரீன்ப்ளே சும்மா மாஸுலே பிச்சு உதறும்.”
“ஹீரோ?”

“இந்தக் கதைக்கு ஹீரோவே தேவைப்படலை. லைவ்வா ஒரு பையன்தான் தேவை. ஆதித்யா என்கிற அந்த கேரக்டருக்கு ரமீஸ் ராஜா பொருந்தினாரு. ஏற்கனவே ‘டார்லிங்-2’ பண்ணியிருக்காரு. அமைதியான கேரக்டர். நெக்ஸ்ட் டோர் பாய்னு சொல்லுவாங்களே, அது மாதிரி கேரக்டர். பத்து பேரை அடிக்கிறது, பார்த்ததுமே லவ்வு மாதிரி விஷயங்கள் இல்லை. நிஜ வாழ்வில் நாம சந்திக்கிற பசங்களுக்கு ரொம்ப நெருக்கமான கேரக்டர் இது.”
“ஜனனி ஐயர்தான் ஹீரோயினா?”

“ஏன் அப்படி கேட்குறீங்கன்னு புரியுது? ரொம்ப சின்ஸியரான ஆக்டர் அவங்க. ஆனா, ஏன் சரியா ஷைன் ஆகலைன்னு யாருக்குமே தெரியலை. திவ்யான்னு ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ரோல் பண்ணுறாங்க. லைஃப் ஆம்பிஷன்னு சொல்லிட்டு அவங்க முன்னெடுக்கிற ஒவ்வொரு அட்டெம்ப்ட்டும் காமெடியில் போய் முடியும். நல்ல ஸ்கோப் இருக்குற கேரக்டர். அவங்களும் சரியாதான் யூஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க. இந்தப் படம் அவங்க கேரியர் வளர்ச்சிக்கும் நிச்சயம் உதவும்.”

“ரொம்ப நாள் கழிச்சி டேனியல் பாலாஜி?”
“ஆமாம். நான் அசிஸ்டெண்டா இருந்தப்போ அவர் பரபரன்னு நிறைய படம் பண்ணிக்கிட்டிருந்தாரு. அப்பவே அவரை நம்ம டைரக்‌ஷனில் நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அவரோட ரோல் என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இந்தப் படம் தொடங்கினப்போ அவரை புக் பண்ணினேன்.

நிறைய பேர் பயமுறுத்தினாங்க. அவரை ஹேண்டில் பண்ணுறதே கஷ்டம்னெல்லாம் சொன்னாங்க. ஆனா, டேனியல் செம கோ-ஆப்பரேடிவ் ஆர்ட்டிஸ்ட். இவரை மாதிரியே கருணாகரனும் நாங்க கேட்டப்போல்லாம் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு செஞ்சாரு.”“ஜி.வி.பிரகாஷ், அவர் நடிக்கிற படத்துலே பாடுறதில்லை. உங்களுக்கு பாடியிருக்காரே?”

“மியூசிக் டைரக்டர் அஸ்வினுக்குதான் அந்த கிரெடிட். அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். இந்தப் பாட்டைக் கேட்டு இம்ப்ரஸ் ஆன பிரகாஷ், நானே பாடுறேன்னு அவரே பாடிக் கொடுத்திருக்காரு. ‘அண்ணன்தான்டா டான்’னு தொடங்குற இந்தப் பாட்டு செம ரகளை. படத்துலே மொத்தம் நாலு பாட்டு. எல்லாத்தையும் கபிலனே எழுதியிருக்காரு.”
“உங்க டைரக்டருக்கு திருப்தியா?”

“அவர் படம் பார்த்து திருப்தி ஆகுறவரைக்கும் எனக்கும் சந்தோஷம்தான். இந்தப் படத்தை ஆரம்பிச்சப்போ மட்டும் அவருக்கு தகவல் சொன்னேன். ‘ஆல் தி பெஸ்ட்’டுன்னு ட்விட்டரில் அவரோட ஃபாலோயர்சுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். ஆடியோ ரிலீஸுக்கு முருகதாஸ் சார்தான் சீஃப் கெஸ்ட்டுன்னு முடிவெடுத்திருக்கேன். சார், சம்மதிச்சி வரணும்.”

- எஸ்ஸார்