காவிரி கரைபுரண்டு ஓடுதா?



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘ஹீரோயினிஸம்’ பகுதியில் இடம்பெற்ற கார்த்திகா பற்றிய கட்டுரை உருக வைத்தது. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நீடிக்க நடிப்பையும் தாண்டிய ஏதோ தகுதி தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது.
- ப.முரளி, சேலம்.

கன்னத்தில் கைவைத்திருக்கும் காருண்யா செளத்ரியின் நடுப்பக்கப் படத்துக்கு ‘கரை புரண்டோடுது காவிரி’ செம டைமிங் கமென்ட்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கொங்கு நாட்டு கோகிலம் கோவை சரளாவின் அதிரடி மினி தொடர், அதிவிரைவு தொடர்வண்டி போல எடுத்தவுடனே எக்ஸ்பிரஸ் வேகம்.
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

எத்தனையோ பெரிய இதழ்கள் வெளிவந்து, இருந்த இடம் தெரியாமல் போன நிலையில் சினிமா வார இதழாக இருந்தும் தொடர்ச்சியாக வெளிவந்து 34 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ‘வண்ணத்திரை’க்கு வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.
- கவிஞர் கா.திருமாவளவன், தெருவெண்ணெய்நல்லூர்.

தண்ணீர் பிரச்னையில் நாடே ரெண்டு பட்டு கிடக்கும்போது உமக்கு மட்டும் காவிரி கரைபுரண்டு ஓடுதோ? இப்படி ஜொள்ளில் வழியும் உம்மை கொள்ளிடத்தில்தான் தள்ளிவிடணும்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘அன்றும் இன்றும்’ பகுதியில் இடம்பெற்ற அழகு ஓவியம் அம்பிகாவின் படங்கள் அருமை.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

சரோஜா கூறியிருக்கும் பலூன், எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியாமல் மண்டையைப் பிச்சுக்க வேண்டியிருக்கு.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.