விஜய் தாறுமாறு!



விஜய், அட்லீ இணைந்திருக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதி அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு ஒரு பாடலுக்காக வெளிநாடு செல்ல உள்ளது. இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோருடன் சுனைனாவும் நடித்திருக்கிறாராம்.



மூன்று நாயகிகள் இருந்தும் என்ன பிரயோசனம்? படத்தில் மூன்று பேருக்குமே க்ளாமர் காட்சிகள் இல்லையென்று தகவல்கள் கசிகின்றன. ‘வேதாளம்’ படத்தில் அஜித் பெண்களை பெருமைப்படுத்தியது போல் இந்தப் படத்திலும் அவர்களை விஜய் கண்ணியமாக காட்டுகிறாராம். போட்டியாளர்கள் இருவரும் நல்ல விஷயத்துக்காகத்தான் போட்டி போடுகிறார்கள். வாழ்த்துவோம்!

- சுரேஷ்ராஜா