பிட்ஸ் பஜாரு!
*மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறார் உதயநிதி.

*‘பரமபதம்’ படத்தில் டாக்டராக நடிக்கிறார் த்ரிஷா.

*‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் ஓப்பனிங் ஸாங் ஆயிரம் ஜூனியர் நடிகர்களை வைத்து  ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளதாம். ‘அண்ணாத்த... அண்ணாத்த...’ என்ற அந்தப் பாடல் செம மாஸாக வந்துள்ளதாம்.

*‘களவாணி’, ‘வாகைசூட வா’, ‘களவாணி-2’ படங்களைத் தொடர்ந்து விமலுடன் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளார். படத்தின் பெயர் ‘எங்க பாட்டன் சொத்து’. ஏற்கனவே ஜெய்சங்கர் நடிப்பில் இதே டைட்டிலுடன் ஒரு படம் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- சுரேஷ்ராஜா