திறப்புவிழா எப்போ?
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
கொரோனா கால தனிமையை விரட்டுது ‘வண்ணத்திரை’. வாழ்க உங்கள் சேவை! - கவிஞர் நீலமலை ஜே.பி, உதகை-2.
லாரி டிரைவராக இருந்து ஹீரோவாக ஆன கரிகாலனின் திரைவாழ்க்கை ஜோராக ஓடட்டும். - பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
கொரோனாவும், கோடையும் ஒருசேர தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ‘வண்ணத்திரை’ நடுப்பக்க வெட்டுக்கிளிகள் இல்லையெனில் வாடி வதங்கி கருவாடு ஆகிவிடுவோம். - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
23-ஆம் பக்க பூஜா மனசு தொறந்து பேசப்போறதா கமெண்ட் அடிச்சிருக்கீங்க. திறப்புவிழா எப்போ? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் மனம் தளராமல் ஓடிடி தளத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ பார்த்து விமர் சனம் எழுதிய உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? - ராமராஜன், மேலூர்.
அழகான சிவில் என்ஜினியரான ஆராத்யா, சினிமாவுக்கு வந்தது சரியான முடிவுதான். இங்கேயும் இளைஞர்களின் மனதில் நிறைய கட்டடம் கட்டுவார். - குந்தவை, தஞ்சாவூர்.
வேலுநாயக்கரை செதுக்கியது எப்படி என்று மணிரத்னம் சொன்ன தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன. - ரமேஷ், நாமக்கல்.
|