மட்டன் கொத்து பரோட்டா



தேவையான பொருட்கள்

பிய்த்த பரோட்டா -2, மட்டன் மசாலா - தேவையான அளவு, முட்டை -1, மட்டன் குருமா - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, தக்காளி -1, வெங்காயம் -1, உப்பு - தேவைக்கு, மல்லி இலை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை

சூடான கடாயில் எண்ணெய் சேர்த்து  வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மட்டன் சேர்த்து நன்கு கிண்டவும். அதனுடன் பிய்த்த பரோட்டா, முட்டை சேர்த்து மட்டன் சால்னாவுடன் சேர்த்து பிரட்டினால் சுவையான மட்டன் கொத்து பரோட்டா ரெடி.

குறிப்பு: மட்டன் குருமா சேர்ப்பது நல்லது.