எக் கொத்து பரோட்டா



தேவையான பொருட்கள்

பிய்த்த பரோட்டா - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - 1 , உப்பு - தேவைக்கு, நாட்டுக்கோழி சால்னா - தேவையான அளவு, தக்காளி - 1, முட்டை - 1, மல்லி இலை, கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை

சூடான தவாவில் எண்ணெய் சேர்த்தவுடன் அதில் வெங்காயம், தேவையான அளவு உப்பு, தக்காளி சேர்த்து பிரட்டவும். பிறகு பிய்த்த பரோட்டாவினை போட்டு முட்டை சேர்த்து அதனுள் நாட்டுக்கோழி சால்னா சேர்த்து வேக வைத்து எடுத்தால் பார்டர் ஃபேமஸ் கொத்து பரோட்டா ரெடி.

குறிப்பு: நாட்டுக்கோழி சேர்ப்பது தனி சுவையே.