ஒயிட் மில்கி லாலிபாப்




என்னென்ன தேவை?

ஒயிட் சாக்லெட் பார் - 100 கிராம்,
வெண்ணெய் - சிறிது,
சுண்டக்காய்ச்சிய பால் - 50 மி.லி.,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
விருப்ப வடிவ லாலிபாப் மோல்டு மற்றும் குச்சிகள்.

எப்படிச் செய்வது?


ஒயிட் சாக்லெட்டை டபுள் பாயிலிங் முறையில் வெண்ணெய், பால் சேர்த்து உருக்கி ஆறவிட்டு ஏலக்காய்த்தூள் கலந்து சாக்லெட்  மோல்டில் ஊற்றி கீழ்புறம் குச்சி சொருகி ஃப்ரிட்ஜில் 15-20 நிமிடங்கள் வைத்து எடுத்து பரிமாறவும்.