பொரி சாக்கி லாலிபாப்



என்னென்ன தேவை?

பொரி - 1 கப்,
வெல்லத்துருவல் - 1/2 கப்,
இனிப்பு விப்பிங் க்ரீம் - 1/4 கப்,
சுக்கு பொடி - 1 சிட்டிகை,
அலங்கரிக்க செர்ரி - சிறிது,
மேலே தூவ ட்ரை கலர் தேங்காய்த் துருவல் - சிறிது.

எப்படிச் செய்வது?


அடிகனமான கடாயில் வெல்லத்துருவல், சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பாகுபதம் வந்ததும் பொரி, சுக்கு பொடி சேர்த்து கிளறி,  இறுகிய பதம் வந்ததும் இறக்கி, கை பொறுக்கும் சூட்டிலேயே உருண்டைகளாக பிடிக்கவும். அதன்மேல் விப்பிங் கிரீம் தடவி கலர்  கோகனட் துருவல் தூவி, செர்ரியால் அலங்கரித்து கீழ்புறம் ஸ்டிக் சொருகி பரிமாறவும்.