குல்கந்து லாலிபாப்



என்னென்ன தேவை?

ரெடிமேட் ரோஜா குல்கந்து - 1/4 கப்,
கசகசா - 1 டீஸ்பூன்,
விருப்பமான உடைத்த நட்ஸ் மற்றும் ட்ரைஃப்ரூட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
லாலிபாப் மோல்டு, ஸ்டிக்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ரோஜா குல்கந்து, கசகசா, நட்ஸ், ட்ரைஃப்ரூட்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்து லாலிபாப் மோல்டில் போட்டு அழுத்தி கீழே  ஸ்டிக் சொருகி எடுத்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: ரோஜா குல்கந்து செய்ய... பன்னீர் ரோஜாப்பூ இதழ்களை நிழலில் ஈரப்பசை இல்லாமல் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.  பாத்திரத்தில் 1 கப் இதழ் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி ஊறவிடவும். 1 மாதத்திற்கு அப்படியே விடவும். குல்கந்து ரெடி.