ட்ரை ஃப்ரூட்ஸ் லாலிபாப்



என்னென்ன தேவை?

பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை கலந்தது - 1 கப்,
கருப்பட்டித் துருவல் - 1/2 கப்,
வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேன் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய காய்ந்த அத்திப்பழம் - 1 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான அல்லது கிட்டார் வடிவ மோல்டு.

எப்படிச் செய்வது?

பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை, அத்திப்பழம், வேர்க்கடலை, தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.  அதனுடன் பொட்டுக்கடலை, கருப்பட்டித் துருவல் கலந்து தேன் ஊற்றி கிளறி சாக்லெட் மோல்டில் வைத்து அழுத்தி எடுத்து பரிமாறவும்.