மஷ்ரூம் லாலிபாப்
என்னென்ன தேவை?
பட்டர் காளான் - 10, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கடலை மாவு - 1/4 கப், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். காளான் தவிர மற்ற பொருட்களை பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து அதில் காளானை முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கீழே லாலிபாப் குச்சி சொருகி பரிமாறவும்.
|