பேரிக்காய் - வெள்ளரிக்காய் பாப்ஸ் (ஃப்ரெஷ் லாலிபாப்)
என்னென்ன தேவை?
பேரிக்காய் - 1, வெள்ளரிக்காய் - 1, பனங்கற்கண்டு தூள் - 2 டேபிள்ஸ்பூன், விருப்பமான பிஸ்கெட் கட்டர், லாலிபாப் குச்சிகள்.
எப்படிச் செய்வது?
பேரிக்காய், வெள்ளரிக்காயை தோல் சீவி வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும். அதில் ஸ்டார், பூ வடிவ பிஸ்கெட் கட்டரால் வெட்டிக் கொள்ளவும். பேரிக்காயின் உள்ளே ஸ்டார் வெள்ளரிக்காயை வைத்து கீழ்புறம் லாலிபாப் ஸ்டிக் சொருகி பனங்கற்கண்டு பொடியை தூவி பரிமாறவும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.
|