ஸ்டார் ஃப்ரூட் லாலிபாப்



என்னென்ன தேவை?

ஸ்டார் ஃப்ரூட் - 2,
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை,
கறுப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.

எப்படிச் செய்வது?


ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும். மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால்  இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும். லாலிபாப் குச்சியில்  முதலில் கறுப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும். விரும்பினால் கறுப்பு  திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம்.