ஸ்பெஷல் வடை



என்னென்ன தேவை?

உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப்,
கடலைப்பருப்பு - 1 சிறிய கப்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ்,
முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பருப்புகளை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பாத்திரத்தில் அரைத்த மாவு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்கறிகள் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.