பேடி மேங்கோ கா சாலன்



என்னென்ன தேவை?

மாவடு - 15,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 1/4 கப்,
நசுக்கிய வெல்லம் - 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க...

வேர்க்கடலை - 4 டேபிள்ஸ்பூன்,
எள் - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மாவடு உடையாமல் அடிபாகத்தில் நான்காக கீறிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்பொழுது கீறிய மாவடு சேர்த்து 2 கொதி விடவும். மாவடு குழையக்கூடாது. இப்பொழுது அரைத்த விழுது சேர்த்து மேலும் 2 கொதி விட்டு வெல்லம் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவி அலங்கரித்து சாதத்தில் பிசைந்தும் இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும்.