அவல், வெள்ளரி தயிர் பச்சடி



என்னென்ன தேவை?

கெட்டித்தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பிஞ்சு வெள்ளரிக்காய் - 1½ கப்,
கெட்டி அவல் - 4 டேபிள்ஸ்பூன்,
கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பச்சைமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்தவற்றை கெட்டியாக நைசாக அரைக்கவும். அவலை சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், உப்பு, அரைத்த விழுது, அவல், மீதியுள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து பிஸிபேளாபாத், சப்பாத்தி, பிரியாணியுடன் பரிமாறவும்.