பலாப்பழ பிரதமன்



என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய பலாச்சுளைகள் - 2 கப்,
வெல்லத்துருவல் - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உடைத்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய்த்துருவல் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பலாச்சுளை, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அரை பதத்திற்கு வெந்ததும் வெல்லத்துருவல் சேர்த்து ஒரு கொதி விட்டு, தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும். ஏலப்பொடி தூவி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கவும்.