பலாமோசு கோப்தா கிரேவி



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய பலாமோசு(பலாப்பழத்தின் பிஞ்சு) 2 கப்,
பச்சைமிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துருவல் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,
பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு, பிரெட் க்ரம்ஸ் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

கிரேவி செய்ய...

பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
உடைத்த முந்திரி - 4 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
பிரியாணி இலை சிறியது - 1.

அலங்கரிக்க...

வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கசூரிமேத்தி - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பலாமோசுவை உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டி மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பிறகு அதனை பாத்திரத்தில் போட்டு பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பனீர் துருவல், சோள மாவு, பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கொள்ளவும். கோப்தா ரெடி.

முந்திரியை 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, பிரியாணி இலை தாளித்து இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும். பரிமாறும் போது பாத்திரத்தில் கோப்தாவை போட்டு, மேலே கிரேவியை ஊற்றி வெண்ணெயை மிதக்க விட்டு கசூரிமேத்தியை தூவி பரிமாறவும்.