தர்பூசணி சர்பத்



என்னென்ன தேவை?

தர்பூசணித் துண்டுகள் - 4 கப்,
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
நசுக்கிய வெல்லம் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
அலங்கரிக்க புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மிக்சி ஜாரில் வெல்லம், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி பின்பு தர்பூசணி துண்டுகளை போட்டு அடித்து இறுதியில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினாவால் அலங்கரித்து அப்படியே அல்லது குளிரவைத்து ஜில்லென்று பரிமாறவும்.