மசாலா பொரி



என்னென்ன தேவை?

அரிசி பொரி - 4 கப்,
வறுக்காத கார்ன்ஃபிளேக்ஸ் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்,
வறுக்காத வேர்க்கடலை - 1/4 கப்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பொட்டுக்கடலை - 6 டேபிள்ஸ்பூன்,
பல் பல்லாக கீறிய தேங்காய் - 1/4 கப்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கார்ன் ஃபிளேக்ஸ், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, தேங்காய் இவை நான்கையும் தனித்தனியே வறுத்து வைக்கவும். ஒரு அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை வறுத்து, முந்தியை வறுத்து, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் வதக்கி அரிசி பொரி, வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும்.