கோடைக்கேற்ற உணவு வகைகள்



‘‘இளவயதில் இருந்தே புத்தகம் படிப்பதிலும், சமைப்பதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. படித்து முடித்து திருமணம் ஆனதும் நடுவில் சிறிது பிரேக். குடும்பப் பொறுப்புகள் ஓரளவு முடிந்ததும் முன்னணி மாத, வார இதழ்களுக்கு நிறைய சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். பல குக்கரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல முன்னணி சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து சமைத்து பரிசுகள் பெற்றுள்ளேன்’’ எனும் ராஜகுமாரி நமக்காக இங்கே 30 வகையான சம்மர் ஸ்பெஷல் உணவுகளை செய்து காட்டியுள்ளார்.

வெயில் காலத்தில் மட்டும் ஸ்பெஷலாக சில காய்கள், பழங்கள் கிடைக்கும். அவற்றைக் கொண்டு என்னென்ன சமைக்கலாம், சம்மர் டூர் அடிக்கும் போது என்ன எடுத்துச் செல்லலாம், சம்மர் விடுமுறைக்கு விருந்தினர் வந்தால் என்ன சமைப்பது என பல விஷயங்களை இங்கே நமக்காக பகிர்ந்திருக்கிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி.

தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி
படங்கள்: ஆர்.கோபால்

சமையல் கலைஞர்
ராஜகுமாரி