பட்டர் சிக்கன்



என்னென்ன தேவை?

சிக்கன் டிக்கா - 200 கிராம்,
மக்கானி கிரேவி - 80 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 20 கிராம்,
கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 20 மி.லி.,
வெண்ணெய் - 20 கிராம்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, மக்கானி கிரேவி மற்றும் சிக்கன் டிக்கா சேர்த்து வதக்கவும். பிறகு மற்ற மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கி, சிக்கனுடன் மசாலா கலந்து வந்ததும் இறக்கி வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.