கோஸ்ட் கி கிலாஃபி
என்னென்ன தேவை?
மட்டன் துண்டுகள் - 250 கிராம், பூண்டு - 5 பல், இஞ்சி - 1 இன்ச் துண்டு, வறுத்த முந்திரி - 5, பொன்னிறமாக வறுத்த வெங்காயம் - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சீஸ் - 10 கிராம், உப்பு - தேவைக்கு, கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய் - தலா 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மட்டன் துண்டுகளுடன் குடைமிளகாய் தவிர மற்ற பொருட்களை நன்றாக கலந்து மிக்சியில் கொத்துக் கறி பதத்திற்கு அரைக்கவும். இதனை ஸ்க்யுவரில் வைத்து நன்கு ரோஸ்ட் செய்து, நறுக்கிய குடைமிளகாயை அதன் மேல் தூவியோ அல்லது குடைமிளகாயை நெய்யில் வறுத்து அலங்கரித்தோ பரிமாறவும்.
|