மட்டன் ரோகன் கோஷ்



என்னென்ன தேவை?

தயிர் - 20 கிராம்,
வெங்காயம் - 50 கிராம்,
மட்டன் - 200 கிராம்,
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலைகள் - 1,
கருப்பு ஏலக்காய் - 2,
ஏலக்காய் - 5,
மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி.,
நெய் - 20 மி.லி.

எப்படிச் செய்வது?

மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலைகள் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு சோம்புத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி குங்குமப்பூ தூவி பரிமாறவும்.