ப்ரியங்களுடன்...
*குழந்தை வரமருளும் குட்டி கிருஷ்ணர் கோயில்களைப் பற்றிய அரிய தகவல்களுடன் வந்த கட்டுரை கோகுலாஷ்டமி சமயத்தில் படித்து பரவசமடைய வைத்துவிட்டது. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
*தளராத நடனப் பயிற்சியின் மேன்மையை உணரச் செய்துள்ளார் பரதக்கலைஞர் பார்வதி பாலசுப்ரமணியன். பாராட்டி வாழ்த்துகிறோம். - எஸ்.லெட்சுமி, திருநெல்வேலி.
*வயநாடு துயர் மீட்புப் பணியில் கூடலூர் ஜீவசாந்தி அறக்கட்டளையின் ஆண்கள் குழு ஆர்வத்தோடு பணியாற்றியது பாராட்டுக்குரியது. - அ.செல்வராஜ், கரூர்.
*பொட்டிக்கடை மூலம் பொருளீட்டும் உசிலம்பட்டி உமாவை உளமார பாராட்டுகிறோம். - பி.கனகராஜ், மதுரை.
*1.32 நிமிடங்களில் 5.49 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனைப் படைத்த ஐந்து வயது சிறுமியின் திறமை நம்மை மலைப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
*பக்க விளைவுகள் இல்லாத பாத்திரங்களான கல்சட்டி, மண்சட்டி, இரும்புச் சட்டி, பித்தளை மற்றும் ஈயப் பாத்திரங்கள் விற்பனையில் ஈடுபாடு காட்டி வரும் கயல்விழி மரபு முறையை மீட்டெடுத்துள்ளார். - செ.சோனிகா, கரூர்.
*தொழில் செய்ய திறமை இருந்தால் போதும் அனுபவம் அவசியமில்லை என்பதற்கு பள்ளி மாணவி கேசிகா மனோகரன் நல்ல உதாரணம். - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
*முகநூலில் இருந்து வெளிச்சத்திற்கு வந்து சாதித்து வரும் சத்யா மருதாணியின் திரைத்துறை கனவு நனவாகட்டும். - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*‘ராஜகோபுர தரிசனம்’ தமிழ்நாட்டிலுள்ள பழம்பெரும் கோயில்களின் சிறப்பை உணர்த்துவதுடன் தமிழர்களின் திறமையையும், ரசனையையும் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. - இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.
*சென்னையில் பாரம்பரிய முறையில் ‘ஐரோப்பிய உணவகம்’... வாசிக்கும் போதே சுவையுணர்வைத் தூண்டியது. - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
*மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் ஓய்வு எங்களை கண்ணீர் வரவழைத்துவிட்டது. வெளியில் கூற முடியாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தாலும் இந்திய மக்களின் மனதில் இடம் பெற்றுவிட்டார். - எஸ்.ஏ.அஞ்சலின், சென்னை.
* ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற வார்த்தையின்படி சிறப்புக் குழந்தைகளுக்காக சேவை புரியும் வானதிக்கு பாராட்டுகள். - தா.சைமன் தேவா, சென்னை.
அட்டைப்படம்: பிரியாலயா, புகைப்படம்: கேமரா செந்தில்
|