வாசகர் பகுதி



புற்றுநோய் தீர்க்கும் பிராய் மரம்

* பராய் (Streblus asper) அல்லது புராமரம் என்பது ஒருவகை மரமாகும். இது பிராய், பிறமரம், குட்டிப்பலா என்றும் குறிப்பிடப்
படுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். இம்மரம் புதற்காடுகளில் அதிகம் காணப்படும். இதன் பால், பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணமுடையவை.

* இதனுடைய இலைகளையும், பட்டைகளையும், வேர்களையும் சேர்த்து சூரணமாக்கி பாலில் கலந்து, ஒரு கிராம் அளவுக்கு இருவேளை உண்டுவந்தால் எலிக்கடிகுணமாகும்.

* மரத்தின் பாலை பித்த ெவடிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால், விரைவில் வெடிப்பு குணமாகும்.

* இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் வலாட்டைல் எனப்படும் எண்ணெய் புற்றுநோய் தீர்க்கும் மாமருந்து என்று அறிவியலார் கண்டறிந்துள்ளனர். இந்த எண்ணெய் ரத்தப்புற்று நோயை குணப்படுத்தவல்லது.

* மரப்பட்டையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமம் சார்ந்த பிரச்னை உள்ள இடங்களில் தடவி வந்தால் குணமாகும்.

* மின்னலைத்தடுக்கும் மரம் என்றும் இதை அழைப்பார்கள். இந்த வகை மரங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் முன்பு இருந்ததால் இந்த மரத்திற்கு பிராய் என்று பெயர் வந்தது.

- இல.வள்ளிமயில், மதுரை.

முதுகுவலியை போக்கும் முருங்கை!

* முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து மிகுந்துள்ளதால் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளவர்கள், முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் விருத்தி ஆகும்.

* முருங்கைக் கீரையுடன் பூண்டும் அதிக அளவில் சேர்த்து உண்டால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். அவர்களுக்கு பலமும் உண்டாகும்.

* முருங்கைக் கீரையுடன் வாழைப்பழம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் குடலில் ஏற்பட்ட புண்கள் ஆறும்.

* முருங்கை இலைகளை நீக்கி ஈர்க்கை மட்டும் எடுத்து மிளகு, சீரகம் சேர்த்து இடித்து ரசம் வைத்து சாப்பிட்டால் முதுகுவலி குணமாகும்.

* முருங்கை இலை துளிரும், வேப்ப இலை துளிரும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

*வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கைக்கீரையும், முருங்கைக்காயும் சமையலில் சேர்த்துக் கொண்டால் மாலைக்கண் நோய் குணமாகும்.

* பச்சைப்பயிருடன் முருங்கைப்பூ சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டால் கண் எரிச்சல் குணமாகும்.

* முருங்கைக்காய், முருங்கைக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகமாக
உற்பத்தி ஆகும். மேலும் மண்ணீரல், கல்லீரல் பலப்படும்.

* முருங்கை ஈர்க்கை சேர்த்து ரசம் வைத்து சாப்பிட, பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கம் குறையும்.

* முருங்கைக் கீரைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும்.

- சு.கண்ணகி, வேலூர்.