வாசகர் பகுதி



புதினா எனும் புதையல்

*நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள் புதினாவில் உள்ளன.

*புதினாவை அரைத்து பற்றுப்போட்டால் தசைவலி, நரம்பு வலி, தலைவலி, கீல்வாத வலிகள் குறையும்.

*முகப்பரு, வறண்ட சருமம் உள்ளவர்கள் இதன் சாறை முகத்தில் பூசிவர நல்ல பலன் கிடைக்கும்.

*புதினா கீரையை நிழலில் காய வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க விட்டு, டீக்குப் பதிலாக அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்.

*புதினா துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுபோக்கு குணமாகும்.

*புதினா இலையை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து இந்த நீரைக்குடித்தால், மூச்சுத்திணறல் நீங்கும்.

*புதினா, பூண்டு மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்து கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து அலசினால், பொடுகு மறைந்து கூந்தல் பட்டுபோல்
பளபளக்கும்.

*புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், செரிமான பிரச்னை நீங்கும்.

- அபர்ணா சுப்பிரமணியம், சென்னை.

சருமம் பளபளக்க பப்பாளி!

*பப்பாளிப்பழம் நுரையீரலுக்கு நன்மை தரும்.

*வைட்டமின்கள் ‘ஏ’ மற்றும் ‘சி’ இருப்பதால் உடலில் கொழுப்பு சேருவதைத் தடுத்து இதய ேநாயிலிருந்து காக்கிறது.

*மலச்சிக்கல், மூலம், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைக் குணமாக்கும்.

*பப்பாளிச்சாறுடன் தேன் கலந்து பருகினால் டான்சில்ஸ் மற்றும் இதர தொண்டைப் பிரச்னைகள் குணமாகும்.

*வினிகரில் பழத்தை ஒருவாரம் ஊற வைத்து தினமும் சிறிது சாப்பிட்டால் மண்ணீரல் வலுவாகும்.

*பழத்தை முகத்தில் பூசிக்கொண்டால் கரும்புள்ளி, பரு மற்றும் மருக்கள் மறைந்து தோல் பளபளப்பாக இருக்கும்.

*தேனோடு சேர்த்து சாப்பிட்டால் குடல்புழுக்கள் வெளியேறும்.

*குடல் நோய்கள், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாயுத்தொந்தரவு மற்றும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு
பப்பாளிக்காய் நல்ல மருந்தாகும்.

*பப்பாளி மரத்தில் சுரக்கும் பால் செரிமானக்கோளாறுக்கு நல்ல மருந்து. செரிமான சுரப்பிகளைத் தூண்டி சத்துக்களை செரிக்க வைக்கும் சக்தி இதற்கு அதிகம்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.