ப்ரியங்களுடன்...



காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் சற்றும் எதிர்பாராத வகையில் தந்து வியப்பூட்டின திடகார்த்தமான உணவு வகைகள்.
திரை உலகில் ஒரு ‘கூண்டுக்கிளி’யாக அடைபட்டாலும், ஒரு வைராக்கிய(ம்)த்துடன், ‘பூவும் பொட்டும்’-மாக வாழ்ந்து காட்டிய நடிகை ஜோதிலட்சுமி மறக்க முடியாத ஒரு ஸ்டார்தான்.
- திருமதி. சுகந்தி நாராயண், வியாசர் காலனி.

‘நான் தோட்டத்தின் தோழி’, ‘அம்ருதா குமாரி’ நமக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். எனக்கும் தோட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்தப் பகுதி மிகுந்த மகிழ்ச்சி தந்தது.‘கொரோனா’ என்று மிரண்டு போகாமல் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து அழகு, ஆரோக்கியம் காத்து சிறப்பாக மெருகேறலாம் என அறிவுறுத்தியது ‘லாக்டவுனில் சருமப் பராமரிப்பு.’
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

கற்பித்தலின் சூட்சுமம், மாணவ-மாணவிகளிடம் தூங்கிக் கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் உன்னதம். தாய் - மகளான ஆசிரியரின் உறவு இவற்றை லாவகமாகவே நம்முன் எடுத்து வைக்கிறது, ‘கற்பித்தல் என்னும் கலை’ கட்டுரை!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கொடூரமானது! அரக்கர்களை விட கொடிய மனம் படைத்தவர்களால்தான் இந்தக் கொடுமையை செய்ய முடியும். அவர்களுக்கு அரசாங்கம் கரிசனம் காட்டாமல் கடும் தண்டனை வழங்குவதே நியாயமான நீதியாகும்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை.

வாழ்வென்பது பெருங்கனவு சாதிக்கத் துடிக்கும் நவீன தலைமுறையினருக்கு நல்லதோர் நம்பிக்கை நல்வழிகாட்டுகிறது.
- கவிதா சரவணன், ரங்கம்.

பூரியில் அருள்பாலிக்கும் ஜெகன்நாதர் கோயிலின் அற்புதத்தை அழகாக சுட்டிக்காட்டி விவரித்தது வெகு அருமை. கோயிலின் மகா அற்புதம் கோபுரத்தின் ேமல் பறவைகள் பறக்காது. நிழல் தரையில் படியாது, பறவை கூடுகட்டி வசிப்பதும் இல்லை... என்னே ஒரு இறைவன் திருவிளையாடல்!
- பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன், சென்னை.

அட்டைப்படம்:  நிக்கி கல்ராணி

படம்: பழனியப்பன் சுப்ரமணியம்