ப்ரியங்களுடன்



ஆங்கிலத்தில் பேசி அசத்தும் பக்வானி தேவி பாட்டி பற்றிய தகவல்கள் வெரிக்யூட்
 - லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.

‘உடற்பயிற்சி என்பது அறிவியல்’ திவ்யா-திவாகர் இருவரின் உற்சாகம் நிறைந்த பேச்சு, உடற்பயிற்சியின் பலன்கள் பற்றி அருமையாக இருந்தது.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

மாறிப்ேபான வாழ்க்கை முறை வரிசைக் கட்டும் பிரச்னைகள் பற்றி படம் பிடித்து காட்டியிருந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- வி.மோனிஷா, திருச்சி.

நாகரீக என்ற கணினி வாழ்சூழலில் மாறிப்போன நம் விளையாட்டு பழக்க வழக்கங்களின் பழமை விளையாட்டு தலைப்பு மனதை ெதாட்டது. ‘உணவே மருந்து’ பகுதியில் தக்கதோர் சமயத்தில் நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை பட்டியலிட்டு பன்மடங்கு பயனோடு பலம் நலம் காத்தது.
- கவிதா சரவணன், ரங்கம்.

அட! பீட்ரூட்டில் இத்தனை பலகாரங்களா? பார்க்கவே ஒவ்வொன்றும் ரத்த சிவப்பில் கண்ணை பறித்து மனதில் சுவைத்து பசியை தூண்டின.
- அ.யாழினி பர்வதம், சென்னை.

ஷீரடி செல்ல முடியாதவர்களுக்கு மகான் சாயி பாபாவின் தென் ஷீரடியை அறிமுகப்படுத்தி தரிசிக்க வழிகாட்டியமைக்கு கோடான ேகாடி நமஸ்காரம்.உலகின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு மகளிருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மெய்சிலிர்க்கும் உணர்வைப் படைத்தது.
- புலவர் தியாகசாந்தன், திருச்சி.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயயின் அபார மொழிப் புலமை, படைப்புத்திறன், கற்பனையாற்றல், ஆசிரியர் பணியிடையே விடாமுயற்சி, எங்களை பிரமிக்க வைத்தது. இவர் சிகரம் தொடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது நிஜம்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

அட்டைப்படம்:  மனாரா சோப்ரா